ஷா அலாம் , பிப் 23- கோத்தா கமுனிங் ஷா அலாம் மாநகர் மன்ற மண்டபத்தில் வெள்ள பேரிடர் உதவித் தொகையை பெறுவதற்கு 2 மணி நேரம் மேலாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானது குறித்து பலர் வருத்தம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பெட்டாலிங் மாவட்ட அலுவலகம் வெள்ளப் பேரிடருக்கான நிதியுதவியை ரொக்கமாக பெற்றுக்கொள்ள விரும்புகிறிர்களா அல்லது வங்கியின் மூலம் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா என விருப்புரிமையை கேட்டது.
பெரும்பாலோர் அந்த தொகையை ரொக்கமாக பெற்றுக்கொள்ள முன்வந்ததால் அவர்கள் நீண்ட நேரம் வரிசையாக காத்திருக்க வேண்டியிருந்ததாக சிலாங்கூர் மந்திரிபுசார் Amiruddin Shari நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
உதவித் தொகையை பெற்றுக்கொள்வதற்கு குறுஞ்செய்தியை பெற்றவர்கள் சரியான நேரத்தில் வந்துவிட்டால் தேவையற்ற தாமதம் மற்றும் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்த்திருக்க முடியும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.