ஷா அலாம், பிப் 22 – கோத்தா கெமுனிங், ஷா ஆலாம் நகராண்மைக் கழக மண்டபத்தில், வெள்ளப் பேரிடர் பாதிப்புக்கான உதவித் தொகையைப் பெற, வெளியில் சாலை வரை , நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்த காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவிடத்திற்கு மக்களை வரவழைப்பதை விடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கிலே சம்பந்தப்பட்ட தரப்பினர் உதவித் தொகையை சேர்த்திருக்கலாம்.
கோவிட் தொற்று அதிகரித்துள்ள இக்காலத்தில், நிலைமை அறிந்து நடந்துக் கொள்ள தெரியாதவர்களாக சம்பந்தப்பட்ட தரப்புகள் இருப்பதாகவும் அவர்கள் சாடினர்.