Latestமலேசியா

வெள்ள உதவித் தொகை; பிப்ரவரி மாதத்திற்குள் கொடுத்துவிட முடியும்; சிலாங்கூர் மந்திரிபுசார் உறுதி

ஷா அலாம், பிப் 3 – சிலாங்கூரில் வெள்ள உதவித் தொகையில் ஏற்பட்ட தாமதத்திற்காக சிலாங்கூர் மந்திரிபுசார் Amiruddin Shari தமது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார். பெட்டாலிங் மற்றும் கிள்ளான் வட்டாரத்தில் வெள்ள உதவித் தொகை கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். கிள்ளான் மாவட்டத்தில் மட்டும் 77,000 பேர் வெள்ள உதவித் தொகைக்கு மனுச் செய்தனர். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை போட்டிருப்பதும் அந்த தாமத்திற்கு காரணம் என்று அவர் தெரிவித்தார். கிள்ளான் வட்டாரத்தில் 30,000 விண்ணப்பங்கள் இன்னும் தீர்வு காணப்படவில்லை. பெட்டாலிங் வட்டாரத்தில் இன்னும் 10,000 முதல் 12,000 விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை என்றும் Amiruddin Shari தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!