
புத்ரா ஜெயா, மார்ச் 21 – நாட்டில் பேரிடரின் தாக்கத்தை குறைப்பதற்காக வெள்ள தடுப்பு திட்டங்களின் அமலாக்கம் விரைவுபடுத்தப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். வெள்ள தடுப்பு திட்டங்களை விரைவாக அமல்படுத்தப்படுவதில் உடனடி நடவடிக்கையில் ஈடுபடும்படி கருவூலத்தின் தலைமை செயலாளர் டத்தோ Johan Mahmood Merican- னுக்கு பணிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்தார். வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கான டெண்டர் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலனை செய்யும்படியும் கருவூலத்தை தாம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.