
கோலாலம்பூர், மார்ச் 14 – ஜோகூர் உட்பட வெள்ள தடுப்பு திட்டங்களை மேற்கொள்வதற்காக குத்தகை நடைமுறையில் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார். வரையறுக்கப்பட்ட குத்தகை முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தாலும் பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்காக அது தொடர்பாக குத்தகை விவகாரத்தில் விரைவான முடிவு எடுக்கப்படும் என நாடாளுமன்றத்தில் அமைச்சரின் கேள்வி நேரத்தின்போது அவர் கூறினார். ஜோகூர் மட்டுமின்றி, Kelantan, Terengganu மற்றும் கெடாவிலும் வெள்ளத் தடுப்பு திட்டங்களுக்கான குத்தகை விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்கப்படும் என அன்வார் கூறினார்.