Latestமலேசியா

வெள்ள நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?

ஷா ஆலாம், ஜன 11- வெள்ள நிவாரண நிதிக்காக விண்ணப்பிக்க அரசாங்க அலுவலகத்தின் முன்பு மணிக்கணக்கில் காத்திருந்த அனுபவத்தைப் பகிர்ந்த டுவிட்டர் பயனர் ஒருவரின் காணொளி பரபரப்பை ஏற்படுத்திவருகின்றது.

@iamjoelee னும் அந்தப் பயனர் பதிவிட்ட காணொளியில் கிள்ளான் நில விவகார அலுவலகத்தின் முன்பு வந்த மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

வழக்கமாக காலை 8 மணிக்குத் திறக்கப்பட வேண்டிய அலுவலகம் 9 மணி வரை திறக்கப்படாமலிருந்தும் அதுகுறித்த முன் அறிவிப்பு நோட்டில் ஏதும் ஒட்டப்படவில்லை. வயது முதிர்ந்தோர் உட்பட பலர் அங்கு காத்திருந்தும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அங்குள்ள ஊழியர்கள் காலை சிற்றுண்டிகளை வாங்கிக்கொண்டு அரட்டையடித்தப்படி பணியிடத்திற்கு சென்றதாக அப்பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, வலைத்தளவாசிகள் பலரும் மருத்துவமனை, பதிவுத் துறை போன்ற அரசாங்க அலுவலகங்களில் பல மணிநேரம் காத்துக்கொண்டிருந்த தங்கள் அனுபவத்தைப் அப்பதிவின் கீழ் பகிர்ந்துவருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!