Latestமலேசியா

வெள்ள நெருக்கடி எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்காது

கோலாலம்பூர், நவ 7 – இவ்வாண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணவர்களை வெள்ள நெருக்கடி பாதிக்காது. வெள்ள பேரிடர் ஏற்பட்டாலும் மாணவர்கள் தங்களது தேர்வை எழுதுவதை உறுதிப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்திருக்கிறார். தற்காலிகமாக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்படும் எஸ்.பி.எம் மாணவர்கள் அவர்கள் தங்கியிருக்கும் நிவாரண மையத்திலேயே தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

டிசம்பர் 5 ஆம் தேதி எஸ்.பி.எம் தேர்வு தொடங்குவதால் வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்குவதற்கான தயார் நடவடிக்கையும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளதாக ஃபத்லினா கூறினார். தேவையேற்பட்டால் தங்கும் விடுதி வசதியைக் கொண்ட பள்ளிகளில் தங்கியிருக்கும் எஸ்.பி.எம் மாணவர்களை நிவாரண மையங்களில் தங்கவைப்பதுடன் அங்கு அவர்களது தேர்வு மையங்களும் ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!