
கோலாலம்பூர், நவ 7 – பொதுத் தேர்தல் வேளையில் வெள்ள நெருக்கடி ஏற்பட்டால் அது குறித்த அவசர நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே பேச்சு நடத்தத் தவறிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை கிள்ளாள் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர்
Charles Santiago சாடினர். நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாகவே வெள்ள நெருக்கடியை எதிர்நோக்குவதற்கு அரசாங்கம் தயாராய் இருப்பதாக கூறப்பட்டதை Charles சுட்டிக்காட்டினார். ஆனால் வெள்ளம் ஏற்பட்டால் மாற்று திட்டம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் பேச்சு நடத்தப்போவதாக இஸ்மாயில் சப்ரி இப்போதுதான் கூறுகிறார். இது தொடர்பாக அவர் ஏன் முன்கூட்டியே தேர்தல் ஆணையத்திடம் விவாதிக்கவில்லையென Charles வெளியிட்ட அறிக்கையில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக வெள்ளம் தொடர்பான நடடிக்கைகளுக்கு முன்கூட்டியே முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என சார்ல்ஸ் வலியுறுத்தினார்.