
குவாந்தான், செப் 10 – பகாங் மாரான் அருகே, வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 3 நண்பர்கள், ஒரே நேரத்தில் விபத்தில் பலியாகிய சம்பவம் நெஞ்சை உருக்கியுள்ளது.
இவ்விபத்து நேற்று மாலை 6.15 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
19, 20 மற்றும் 35 வயதான அம்மூவரும் உணவருந்திவிட்டு, மோட்டார் சைக்கிளில் வரிசையாக வந்துக் கொண்டிருந்த சமயத்தில், எதிர் சாலையில் வந்த கார் ஒன்று கட்டுபாட்டை இழந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே மாண்டதாக மாரான் மாவட்ட போலிஸ் தலைவர் நூர்சம்ரி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
காரை ஓட்டி வந்த 51 வயது ஆடவர் நெஞ்சுப் பகுதியில் காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இவ்விபத்து குறித்து மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.