
ஜெர்த்தே, மே 22 – திரெங்கானுவில் Hulu Besut Rasil வனப் பகுதியில் வேட்டைக்கு சென்றிருந்தபோது தமது நண்பரால் தவறுதலாக சுடப்பட்ட ஆடவர் ஒருவர் கடுமையாக காயம் அடைந்தார். சனிக்கிழமையன்று அதிகாலை ஒரு மணியளவில் நடந்த அந்த சம்பவத்தில் 38 வயதுடைய ஆடவர் 32 வயதுடைய நபரை சுட்டதை Besut போலீஸ் தலைவர் Abdul Rozak தெரிவித்தார். அந்த இரண்டு நெருங்கிய நண்பர்களும் சொந்தமாக தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றுடன் மான் வேட்டைக்காக Hulu Besut Rasil வனப் பகுதிக்கு சென்றது முன்னோடி விசாரணையில் தெரியவந்ததாக Abdul Rozak கூறினார்.
வீட்டிற்கு திரும்பும் வேளையில் துப்பாக்கியை வைத்திருந்த அந்த ஆடவர் தவறுதலாக அதன் விசையை அழுத்தியதால் பின்னால் இருந்த நபர் மீது துப்பாக்கி சூடு பாய்ந்தாக Abdul Rozak வெளியிட் அறிக்கையில் தெரிவித்தார். அந்த துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்ட அந்த நபரின் கழுத்து மற்றும் கைகளில் புகுந்ததாகவும் அவர் கூறினார். துப்பாக்கி சூட்டுக் காயத்திற்கு உள்ளான நபர் தற்போது Sultanah Nur Zahirah மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்தமாக வேலை செய்துவரும் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதோடு அவரிடமிருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.