ஜோகூர் பாரு, பிப் 26- ஜோகூர், N44-லார்க்கின் தொகுதியில் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்போது SOP விதிமுறைகளை மீறிய நிருபர் ஒருவருக்கு முதல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறை மண்டபத்தில் செயல்பட்ட வேட்புமனுத் தாக்கல் மையத்தில், தூர இடைவெளியைப் பின்பற்றத் தவறியதற்காக Weng Kian Yong எனும் அந்த மாண்டரின் மொழி பத்திரிக்கை நிருபருக்கு 1,000 ரிங்கிட் அபராதத் தொகை செலுத்த உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், தம்மைப் போலவே மற்ற நிருபர்களும் வேட்பாளர்களை நெருங்கி புகைப்படங்களும் பேட்டியும் எடுத்த நிலையில், தமக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது ஏன் என புரியவில்லை என அந்த நிருபர் ஆதங்கப்பட்டார்.