செர்டாங், பிப் 28 – Seri Kembangan Taman Puncak Jalil லில் வேன் ஓட்டுனர் ஒருவர் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட காணொளி குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
21 வினாடிகளைக் கொண்ட காணொளி ஒன்று முகநூலில் பகிரப்பட்டு வருவதை தாங்கள் அறிந்துள்ளதாக Serdang மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் A.A Anbalagan உறுதிப்படுத்தினார்.
Proton Saga BLM காரில் வந்த ஆடவர் வேன் ஓட்டுனரை தாக்குகிறார். அதோடு வேனிலிருந்து இழுக்கப்படும் ஓட்டுனர் கீழே விழுந்து கிடப்பதையும் காணமுடிவதாக அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.