
ஜோகூர் பாரு, ஆக 12 – தாங்கள் பயணம் செய்த சிறு ரக வேன் ஒன்று ராணுவ பீரங்கி வாகனத்தில் மோதியதில் ஒரு பெண்ணும் இதர மூன்று பையன்களும் காயம் அடைந்தனர். கோத்தா திங்கியில் Punggai க்கு முன்னதாக Taman Damai யில் நிகழ்ந்த இந்த விபத்தில் Honda Odyssey சிறு வேனில் பயணம் செய்த 54 வயது பெண்ணும் , ஏழு , ஐந்து மற்றும் நான்கு வயதுடைய மூன்று பையன்களும் காயம் அடைந்தனர். Teluk Sepang முகாமிற்கு சென்று கொண்டிருந்த அந்த பீரங்கி வாகனம் Honda Odyssey வேனில் மோதியதாக Punggai தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கை கமாண்டர் Deddy Borhan Umaali வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.