Latestமலேசியா

பெண் பயணிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த p-hailing ஓட்டுநருக்கு அபராதம்

ஆயர் குரோ, பிப்ரவரி 27 – மலாக்காவில், காரில் ஏறிய பெண் பயணியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய p-hailing ஓட்டுநருக்கு RM 3,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அக்குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து 20 வயதான அவ்விளைஞனுக்கு ஆயர் குரோ மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அத்தண்டனையை அறிவித்தது.

பிப்ரவரி ஐந்தாம் தேதி காலை 10 மணியளவில் தாமான் செங் பெர்டானாவில் அவன் அக்குற்றத்தைப் புரிந்திருக்கிறான்.

சம்பவத்தின் போது, தனது காரில் ஏறிய 22 வயது பெண் பயணியை வலுக்கட்டாயமாக அணுகிய முஹமட் சியாஹ்மி, அப்பெண்ணின் அந்தரங்க பகுதிகளைத் தொட்டு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளான்.

குற்றவியல் சட்டத்தின் 354-வது பிரிவின் கீழ் வரும் அக்குற்றத்திற்கு, பத்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது மேற்கண்ட மூன்றில் இரண்டு தண்டனைகளை வழங்க சட்டத்தில் இடமுண்டு.

குற்றவாளிக்கு நல்லதொரு படிப்பினையாக இருக்க, அவனுக்கு தக்க தண்டனை தருமாறு அரசு தரப்பு நீதிபதியை வலியுறுத்தித்தியது.

ஆனால், சியாஹ்மியின் வழக்கறிஞரோ, அது அவனுக்கு முதல் குற்றம் என்பதோடு, அவன் தன் தவற்றை உணர்ந்து விட்டான்; அதோடு இளவயது என்பதால் குறைந்த தண்டனையை வழங்குமாறு நீதிபதியிடம் முறையிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் செவிமெடுத்த நீதிபதி, குற்றவாளிக்கு RM 3,500 ரிங்கிட் அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!