
பெட்டாலிங் ஜெயா, ஜன 12 – தந்தையின் இறப்புக்குப் பின், வேறொரு ஆடவருடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில் தனது தாயை அடித்ததோடு, கொலை செய்யப் போவதாகவும் மிரட்டியிருக்கின்றான் 35 வயது ஆடவன் ஒருவன்.
அந்த சம்பவம், கடந்த செவ்வாய்க்கிழமை சிலாங்கூர், பூச்சோங் உதாமா ( Puchong Utama ) தொழிற்துறைப் பகுதியில் நிகழ்ந்ததாக, சுபாங் ஜாயா மாவட்ட போலீஸ் தலைவர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார்.
அந்த சம்பவம் தொடர்பில், அன்றைய தினம் பாதிக்கப்பட்ட 58 வயதான அந்த ஆடவரின் தாயார் போலீசில் புகார் கொடுத்ததாக அவர் கூறினார்.அந்த புகாரை அடுத்து கைது செய்யப்பட்ட அந்த ஆடவன், போதைப் பொருள் உட்கொண்டிருந்ததோடு, அவன் மீது 15 பழைய குற்றப் பதிவுகளும் இருந்தது தெரிய வந்ததாக Wan Azlan குறிப்பிட்டார்.