
சென்னை, ஜன 13 – அயல் நாடுகளில் வேலைக்கு சென்றபோது மரணம் அடையும் தமிழர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசாங்கம் ஓய்வூதியம் வழங்கும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அயலகத் தமிழர்களின் நல்வாழ்வுக்காகவே அயலக தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் பதிவு செய்தவர்களுக்கு பல் வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும என அவர் தெரிவித்தார். நேற்று சென்னையில் அயலகக் தமிழர் நாள் கொண்டாட்ட நிகழ்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது ஸ்டாலின் இதனை தெரிவித்தார். ஏற்னவே வெளிநாடுவாழ் தமிழர்கள் நலனுக்கென பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு செய்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். கோவிட் தொற்று காலத்தில் வெளிநாடுகளிலிருந்து 80,000 தமிழர்கள் பாதுகாப்பாக தமிழ் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.