Latestமலேசியா

அரசாங்கத்தை அறிமுகப்படுத்த 2020 ஆம் ஆண்டு முதல் 700 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டது

கோலாலம்பூர், நவ 7 – அரசாங்கத்தை அறிமுகப்படுத்துவதற்காக 2020 ஆம் ஆண்டு முதல் 700 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தெரிவித்திருக்கிறார். இந்த செலவில் பெரும்பாலானவை விளம்பரங்கள் மற்றும் அரசாங்கத்தின் முயற்சிகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைக்காக ஊடகங்கள் அவற்றை வாங்குவதற்காக பிரதமர் துறையின் அலுவலகங்கள் செலவிட்டுள்ளதாக அவர் கூறினார். பிரதமர்களை அறிமுகப்படுத்துவதற்கு சில ஊடக நிறுவனங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் அன்வார் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் பதவிக் காலத்தில் அரசாங்கத்தை அறிமுகப்படுத்துவற்காக 500 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டதாகவும் இவற்றில் கோவிட்-19 தொடர்பான முயற்சிகளும் அடங்கும் என அன்வார் குறிப்பிட்டார். இஸ்மாயில் சப்ரி பிரதமராக இருந்த காலத்தில் அவர் தமது அரசாங்கத்தை அறிமுகப்படுத்துவதற்காக அதிகமாக செலவிடவில்லை என்றும் அன்வார் விளக்கம் அளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!