Latestஇந்தியா

வேலைக்கு வர கட்டாயப்படுத்தப்பட்டேன்; சுவாசக் கருவியுடன் வேலைக்கு வந்த வங்கி நிர்வாகி

புதுடில்லி, ஜூன் 4 –  கோவிட் தொற்றிலிருந்து விடுபட்டிருந்தாலும், பிராணவாயு கலனின் உதவியுடன் இன்னும் சுவாசித்துக் கொண்டிருக்கும் தன்னை, அலுவலகத்திற்கு வர சொல்லி கட்டாயப்படுத்தியதாக,  இந்தியா சார்கண்டுவில் ஆடவர் ஒருவர் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றார்.

பஞ்சாப் தேசிய வங்கியில் நிர்வாகியாக பணிபுரிந்து வரும் அரவிந்த் குமார்  என்பவரின்  காணொலியே, அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சர்ச்சையான அந்த காணிலியில், நடுத்தர வயது மதிக்கத்தக்க ஆடவரான அரவிந்த்,  சுவாசக் கருவியைப் பொருத்திக் கொண்டு, மூச்சு வாங்க பேசிக் கொண்டிருக்கிறார்.  அவரது மனைவி பக்கத்தில் நின்று அவரைத் தேற்றிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது.

நுரையீரல் பகுதி வரை கோவிட் -19 வைரஸ்  தொற்றியிருந்ததால், தன்னை மருத்துவர் மூன்று மாத காலம் ஓய்வில் இருக்கும் படி அறிவுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார். இவ்வேளையில், அர்விந்த் குமார் வேண்டுமென்றே  சர்ச்சையை ஏற்படுத்த முயல்வதாக , அவர் பணிபுரியும் வங்கி தெரிவித்துள்ளது.

அந்த ஆடவர்,  சொத்து கடன் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வந்ததாக அந்த வங்கி கூறியது.  அந்த விசாரணையைத் தொடர்ந்து அவர் வழங்கியிருந்த வேலை நிறுத்த கடிதத்தை நிராகரித்து இருப்பதாகவும் அந்த வங்கி குறிப்பிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!