Latestமலேசியா

வேலையில்லாதோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைகிறது

கோலாலப்பூர், பிப் 8 – வேலையில்லாதவர்களில் மேலும் அதிகமானோர் வேலை
வாய்ப்பை பெறத் தொடங்கியுள்ளனர். டிசம்பர் மாதம் வேலையில்லாதோர் விகிதம் 4.2 விழுக்காடகும் என தலைமை புள்ளி விவரத்துறையின் தலைமை அதிகாரி Uzir Mahidin தெரிவித்தார். தேசிய மீட்சித் திட்டத்தில் பொருளாதார துறைகள் கட்டம் கட்டமாக திறக்கப்பட்டதன் மூலம் பொருளாதாரத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சியை நாடு அடைந்துள்ளதை இது காட்டுவதாக அவர் சொன்னார். மொத்த விற்பனை மற்றும் சில்லரை வர்த்தகத்துறையிலும் அதிகமானோர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் உணவு, பானங்கள் துறை மற்றும் தகவல் தொடர்பு துறையிலும் அதிகமானோர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!