மோஸ்கோ, பிப் 13 – வேலையில் சலிப்புத் தட்டியதால், கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியத்தில் கிறுக்கியிருக்கின்றார் பாதுகாவலர் ஒருவர். அதனால் ரஷ்யாவில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 35 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள ஓவியம் பாழாகியது.
முகம் தெரியாமல் இருந்த ஓவியத்தில், அந்த பாதுகாவலர் பேனாவைக் கொண்டு கண்களை வரைந்துள்ளார். ஓவியத்தில் வித்தியாசம் இருப்பதை வருகையாளர்கள் கண்டறிந்து தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து, 60 வயது மதிக்கத்தக்க பாதுகாவலர், வேலைக்கு சேர்ந்த முதல் நாளே பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
மேலும் , ஒருவரின் சொத்தை சேதப்படுத்தியதாக அந்நபர் மீது போலீசார் விசாரணையையும் மேற்கொண்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறையில் வைக்க முடியும்.
கிறுக்கப்பட்ட புகைப்படத்தை சரிப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நீண்ட கால பாதிப்பு இன்றி அந்த ஓவியத்தை சரிப்படுத்துவது சிரமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஓவியம் 1932- 34 -ஆம் ஆண்டு கால கட்டத்தில் வரையப்பட்டதாகும்.