கோலாலம்பூர், பிப் 16 – வேலை உத்தரவாத திட்டம் ஆறு லட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் .
480 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட அந்த திட்டத்தை இம்மாதம் 19 ஆம் தேதியன்று பிரதமர் Ismail Sabri Yaakob தொடக்கி வைப்பார் என நிதியமைச்சர் Tengku Zafrul Abdul Aziz தெரிவித்தார்.
வேலை உத்தரவாத திட்டத்தின் கீழ் இவ்வாண்டுக்கான முதலாவது வேலை வய்ப்பு கண்காட்சி கோலாலம்பூர் மாநாட்டு மண்டபத்தில் தொடங்கப்படும். நிதியமைச்சு , மனித வள அமைச்சின் ஒத்துழைப்போடும் ,Perkeso மற்றும் HRD Corp நிறுவனங்களின் ஏற்பாட்டு ஆதரவோடு அந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்களை வழங்கும் அந்த கண்காட்சியில் 50 தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் என Tengku Zafrul கூறினார்.