
ஜெப்பாங், ஜன 24 -வேலையில்லாதவர்களுக்கு வேலை பெற்றுத் தருவதற்காக உருவாக்கப்பட்டுள்ள myfuture job இணையத் தளத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி வேலை தேடும் இளைஞர்களை மனித வள அமைச்சர் சிவக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் தனியார் துறையில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்கள் உள்ளன. எனவே உயர்க்கல்வி நிலையங்களிலிருந்து வெளியேறிய நமது இளைஞர்கள் myfuture job அகப்பக்கத்தில் பதிவு செய்து கொள்வதற்கு முன்வர வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
மேலும் இல்லத்தரசிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சொக்சோவின் காப்புறுதி திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார். 55 வயதுக்குட்பட்ட குடும்ப மாதர்கள் இந்த திட்டத்தில் உடனடியாக பதிவு செய்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஜெலபாங்கில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது சிவக்குமார் இதனை தெரிவித்தார்.