
பேராக், ஜன 25 – சிம்பாங் பூலாய்க்கு அருகே, சாலையில் பெரிய அளவில் பட்டாசுகளும், வானவேடிக்கைகளும் கொளுத்தப்பட்ட காணொளி வைரலானது தொடர்பில் போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.
அந்த 13 நிமிடம் 46 காணொளி முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து வைரலானது.
கடந்த திங்கட்கிழமை, இரவு மணி எட்டு வாக்கில், கம்போங் பாருவில் அந்த காணொளி பதிவுச் செய்யப்பட்டது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் யாஹ்யா ஹசான் தெரிவித்தார்.
மக்கள் ஒன்று திரண்டு அந்த பட்டாசு வெடிப்பை காணும் காட்சிகளும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
அதுபோன்ற செயல்கள், பொது அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மருட்டலை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், சமூக ஊடக பயனர்கள் அது தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.