Latestமலேசியா

வைரல் காணொலி; மக்கள் நெரிசலாக இருக்குமிடம் GM klang அல்ல

கிள்ளான், மே 9 – GM Klang மொத்த வியாபார மையத்தில் SOP-கள் கடைப்பிடிக்கப்படாமல், மக்கள் கூட்டம் நெரிசலாக இருப்பதாக  வைரலாகியிருக்கும் காணொலி உண்மையல்ல என போலீஸ் கூறியுள்ளது.

GM klang தனது அதிகாரப்பூர்வ அகப்பத்தின் மூலமாக அந்த தகவலை மறுத்திருப்பதாக, தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் சம்சூல் அமார் ரம்லி தெரிவித்தார்.

இவ்வேளையில், மக்கள் மத்தியில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக் கூடிய உண்மையற்ற தகவலை மக்கள் பகிர வேண்டாமென அவர் அறிவுறுத்தினார்.

அவ்வாறு பொய்யான தகவலைப் பரப்புவோர் மீது 1998 –ஆம் ஆண்டு தொடர்பு பல்லூடக சட்டத்தின்,  கீழ்  நடவடிக்கை எடுக்க முடியுமென்றாரவர்.

பேரங்காடி ஒன்றில், மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் 0.19 வினாடிகள் கொண்ட காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் ( சனிக்கிழமை) வைரலாகியிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!