
கோலாலம்பூர், செப் 19 – பெண்களின் தரத்தைக் குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்திருக்கும் காணொளி தொடர்பில், தன்னைத் தற்காத்து பேசியிருக்கின்றார், மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சர் ரீனா ஹாரூன்.
முன்னதாக, அமைச்சர் ரீனா ஹாருனும் இடம்பெற்றிருந்த காணொளியில், ஆண் நடிகர் ஒருவர் பெண்கள் ‘மெதுவாக’ செயல்படக் கூடியவர்கள் என கூறியிருந்தார்.
அந்த காணொளி வைரலாகி, பலரது குறை கூறல்களைப் பெற்ற வேளை, எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வரக் கூடியவர்கள் பெண்கள் என, அமைச்சு கூறமுற்பட்டிருக்கும் கருத்தினை பொதுமக்கள் உணரும்படி, ரீனா ஹாருன் கேட்டுக் கொண்டார்.