மலாக்கா, பிப் 5- மலாக்கா, Gajah Berang சாலையில் அமைந்துள்ள ஶ்ரீ சுப்பிரமணியர் திரெளபதை அம்மன் ஆலய பரிபாலன சபையின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (6ஆம் திகதி) நடைபெறவுள்ளது.
தெற்காசியாவிலேயே நான்கு ராஜகோபுரங்களைக் கொண்ட ஒரே கோயில் என்ற பெருமையைக் கொண்டது இந்ததிரெளபதை அம்மன் ஆலயம்.
மிக விமரிசையாக நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயத்தின் சந்தினாங்கள் உட்பட, பல பகுதிகள் புதுப்பிக்கப்பட்டதாக பரிபாலன சபை தலைவர் சிவஶ்ரீ சண்முகம் குருக்கள் அவர்கள் தெரிவித்தார்.
கும்பாபிஷேகம் குறித்த விவரங்களைப் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்த ஆலயக் குருக்கள், அந்தக் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு ஆசி பெறும்படியும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டனர்.