Latestமலேசியா

ஶ்ரீ மூடா வெள்ளப் பிரச்சனைக்கு எப்போதுதான் தீர்வு? – கோத்தா கெமுனிங் பிரகாஷ் கேள்வி

ஶ்ரீ மூடா, ஏப்ரல் 11 – சற்று கடுமையான மழை பெய்தாலே, கிள்ளான் ஶ்ரீ மூடா வீடமைப்பு பகுதி வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. இப்பிரச்சனைக்கு எப்போதுதான் நிரந்தர தீர்வு என மாநில மற்றும் கூட்டரசு அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ்.

நேற்று இரவு முதல் பெய்து வந்த அடைமழையில், ஶ்ரீ மூடா பகுதி உட்பட கிள்ளான் பள்ளத்தாக்கில் பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அதில் ஶ்ரீ மூடாவில் வெள்ளத்தின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக் நம்பப்படும் ஒரு வெளிநாட்டினர் நீரில் மிதக்கும் காணொளி ஒன்றும் வைரலாகி வருகிறது.

இதனிடையே இது குறித்து கருத்துரைத்த பிரகாஷ், மேல் விவரங்களுக்காக காத்திருப்பதாக வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

அதே வேளை, ஒவ்வொரு முறையும் வெள்ளம் வரும்போது, அப்போதைக்கு தற்காலிக தீர்வு காண்பது இப்பிரச்சனைக்கான முடிவல்ல. அதே சமயத்தில், பொறுப்பான தரப்பினரின் தாமதமான நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட மக்களை விரக்தியில் தள்ளுகிறது.

இது ஒரு பழைய வீடமைப்புப் பகுதி, நீர்வடிக்கால் முறை மிகவும் பழைமையானது. அவையெல்லாம் சரி செய்யப்பட்டால் மட்டுமே இப்பிரச்சனைக்கு தீர்வு பிறக்கும்.

மழை பெய்தாலே, இங்குள்ள மக்கள் பீதியில் தள்ளப்படுகின்றனர். இதனால் ஏற்படும் பண நஷ்டம் வேறு.

இம்முறை ஶ்ரீ மூடாவைத் தவிர்த்து. அருகாமையிலுள்ள பிற இடங்களிலும் வெள்ளம் ஏறியிருப்பது வெள்ளத்தை தடுக்க பொறுத்தப்பட்டுள்ள “Pam” சரியாக இயங்கவில்லை அதே சமயத்தில் போதவில்லை என்றுதான் தெரிகிறது.

மாநில அரசாங்கம், வெள்ளத்தை தடுக்க முயற்சிகள் எடுத்து வருவது உண்மைதான், ஆனால் அவை பிரச்சனையைத் தீர்க்க போதவில்லை.

எனவே, அரசாங்கம் உடனடியாக நிரந்தர தீர்வை கொண்டு வரும் வகையில் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என பிரகாஷ் மாநில மந்திரி பெசாரை கேட்டுக் கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!