Latestமலேசியா

ஷக்கிர் நய்க் விரைவில் மலேசியா திரும்புவார்

கோலாலம்பூர், மார்ச் 27 – தற்போது Oman – னில் இருக்கும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமய போதகர் Zakir Naik (ஷக்கிர் நய்க்) விரைவில் கோலாலம்பூர் திரும்புவார். Oman நிகழ்ச்சிகள் முடிந்தபின் Zakir Naik (ஷக்கிர் நய்க்) உடனடியாக கோலாலம்பூர் வந்தடைவார் என அவரது வழக்கறிஞர் Akberdin Abdul Kader தெரிவித்தார். எனினும் தமது கட்சிக்காரரின் பாதுகாப்பு கருதி இது தொடர்பான இதர விவரங்களை வெளியிடமுடியாது என அவர் கூறினார். ஷக்கிர் Oman னில் கைது செய்யப்பட்டதோடு அவர் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார் என கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தகவலை இதற்கு முன் Akberdin மறுத்தார். Oman தலைநகர் Muscat ட்டில் ஷக்கிர் நய்க்கிற்கு அரசாங்க வரவேற்பு நல்கப்பட்டதாகவும் அந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!