
கோலாலம்பூர், மார்ச் 12 – அம்னோ மகளிர் பதவியை Datuk Seri Dr Noraini Ahmad தற்காத்துக் கொண்டார். நாடு முழுவதிலும் உள்ள 191 டிவிசன்களில் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி Parit Sulong நாடாளுமன்ற உறுப்பினருமான Noraini , 106 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட அம்னோ மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியான Shahrizat Abdul Jalil குறுகிய வாக்குகளில் தோல்வி கண்டதாக அம்னோ மகளிர் பிரிவின் செயலாளர் Rosni Sohar தெரிவித்தார்.
இதனிடையே அம்னோ புத்ரி நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கின் புதல்வி Nooryana Najwa , 84 வாக்குகளுடன் முதல் இடத்தைப் பெற்றார்.
Umno Puteri தலைவி பதவிக்கான தேர்தலில் டத்தோ Nurul Amal Mohd Fauzi முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.