கோத்தா பாரு, மே 9 நவீன வசதிகளுடன் பல்நோக்கு மருத்துவமனையாக மாஹ்சா ஸ்பெஷாலிஸ் மருத்துவமனை; விரைவில் திறப்பு விழா
– Syariah குற்ற சட்டங்களின் கீழ் ரத்து செய்யப்பட்ட 16 விதிகைளை கிளந்தான் அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தவிருக்கிறது. மாநில சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்படவிருந்த 2019ஆம் ஆண்டின் கிளந்தான் ஷரியா குற்றவியல் சட்டத்தின் 18 விதிகளில் 16 விதிகளை கடந்த பிப்ரவரி மாதம் கூட்டரசு நீதிமன்றம் ரத்துச் செய்தது. மே 21 ஆம் தேதி ஷரியா சட்ட மற்றும் அமைப்புகளை வலுப்படுத்தும் மாநாட்டின் மூலம் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடல் நடத்தப்படும் என கிளந்தான் ஆட்சிக்குழு உறுப்பினர் Mohd Asri Mat Daud தெரிவித்தார்.
ரத்துச் செய்யப்பட்ட விதிகள் தொடர்பான மூன்று அறிக்கைகள் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு ஷரியா குற்றவியல் சட்ட விதிகளை தற்காக்கும் சிறப்பு குழு மூலமாக விரிவாக விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ரத்துச் செய்யப்பட்ட சட்டங்களை அங்கீகரிப்பதற்கு மாநில சட்டமன்றத்தில் அவற்றை மீண்டும் எப்படி அறிமுகப்படுத்துவது என்பதை நாங்கள் ஆராய்வோம் என நேற்று நடைபெற்ற ஆட்சிக் குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் Mohd Asri Mat Daud கூறினார்.