Latestஉலகம்

ஷாக்கிர் நய்க் ஓமானில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்படலாம்

மஸ்காட், மார்ச் 22 – இந்தியாவில் தேடப்பட்டுவரும் இஸ்லாமிய சமய போதகர்
Zakir Naik ஓமான் அதிகாரிகளால் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை கைது செய்து இந்தியாவுக்கு வெளியேற்றுவதற்கு ஓமான் அதிகாரிகள் முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஓமனிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருவதாக இந்திய உளவு நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மார்ச் 23ஆம் தேதியும் 25 ஆம் தேதியும் நடைபெறும் இரண்டு சமய விரிவுரை நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தற்போது Zakir Naik ஓமனில் இருந்து வருகிறார். . அவரை கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும்படி இந்திய அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு ஓமன் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!