ஷா அலாம், பிப் 28 – ஷா அலாமில் இரு வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த தீ விபத்தில் இரு தொழிற்சாலைகள் அழிந்தன. செக்சன் 15, Jalan Beramban னில் காலை மணி 6. 10 அளவில் அச்சக தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் அந்த தொழிற்சாலையின் 90 விழுக்காடு பகுதி அழிந்தது.
ஷா அலாம் செச்ஷன் 17 இல் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நிகழ்ந்த மற்றொரு தீ விபத்தில் மேலும் ஒரு தொழிற்சாலையின் 50 விழுக்காடுப் பகுதி அழிந்தது.
எனினும் அந்த இரு விபத்துகளிலும் எவரும் காயம் அடையவில்லையென சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குனர் Norazam Khamis தெரிவித்தார்.