Latestமலேசியா

ஷா அலாம் லோக்காப்பில் ஆடவர் மரணம்

கோலாலம்பூர், செப் 12 – ஷா அலாம் லோக்காப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டைச் சேர்ந்த 33 வயதுடைய ஆடவர் ஒருவர் மரணம் அடைந்தார். நேற்று விடியற்காலை மணி 4.59 அளவில் அந்த ஆடவர் சுயநினைவின்றி இருந்ததாகவும் அவர் இறந்துவிட்டதை ஷா அலாம் மருத்துவமனையின் அதிகாரி காலை மணி 5.20 அளவில் உறுதிப்படுத்தியதாக புக்கிட் அமான் தொழில் தொடர்புப் பிரிவின் தலைவர் A. Skandaguru தெரிவித்தாக போலீஸ் தலைமையகம் தகவல் தெரிவித்தது. அந்த ஆடவர் திடீர் மரணம் அடைந்ததாகவும் இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தும் என்றும் அவர் கூறினார். அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் ஜூலை 29-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அந்த ஆடவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!