![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/10/MixCollage-10-Oct-2024-02-01-PM-3013.jpg)
ஷா ஆலம், அக்டோபர் 10 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஷா ஆலம், பெர்சியாரன் காயங்கனில் (Persiaran Kayangan), சாலை பகடிவதையில் ஈடுபட்டு, ஆடவர் ஒருவரையும் மோதிய சந்தேக நபரை காவல்துறை கைது செய்துள்ளது.
26 வயது மதிக்கத்தக்க இந்தச் சந்தேக நபர் வாகன உதிரிப்பாக விற்பனையாளராவர்.
பாதிக்கப்பட்டவர் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, இந்த விற்பனையாளர் வியோஸ் வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி வந்து மோதியுள்ளார்.
இதனிடையே இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட, பாதிக்கப்பட்டவரை இந்த வியாபாரி மோதியுள்ளார்.
இதனால், அவர் கீழே வீழ, வாகனத்தின் டயரை அவரின் வலது காலில் ஏற்றி இறக்கி, ஓட்டம் பிடித்துள்ளான், அந்த விற்பனையாளர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை விரைந்து நடவடிக்கையில் ஈடுபட்டு, அந்த விற்பனையாளரைக் கையும் களவுமாக கைது செய்திருக்கிறது.
முதற்கட்ட சோதனையில் அந்த வாகன உதிரிபாக விற்பனையாளர், Benzo வகை போதைப்பொருள் உட்கொள்வது தெரியவந்துள்ளது.