
ஷா ஆலாம், ஏப்ரல்-15, சிலாங்கூர், ஷா ஆலாமில் நேற்று காலை சாலையைக் கடக்க முயன்ற போது வீடற்றவரா ன 52 வயது மாது கார் மோதி கொல்லப்பட்டார்.
செக்ஷன் 19, பெர்சியாரான் ஜூப்லி பேராக் சாலையின் பேருந்து நிறுத்துமிடத்தருகே அதிகாலை 5.40 மணிக்கு அவ்விபத்து ஏற்பட்டதாக, ஷா ஆலாம் போலீஸ் தலைவர் துணை ஆணையர் மொஹமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.
மஸ்ஜித் ஸ்ரீ மூடாவுக்குத் அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் வழியில் 61 வயது ஆடவர் ஓட்டி வந்த Perodua Axia காரால் அம்மாது மோதப்பட்டார்.
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அச்சம்பவம், ஆபத்தாக வாகனமோட்டி மரணம் விளைவித்ததன் அடிப்படையில் விசாரிக்கப்படுகிறது.