Latestமலேசியா

ஷா ஆலாமில் திருமணப் பொருட்களை விற்கும் கடையில் கொள்ளை; நால்வருக்கு போலீஸ் வலை வீச்சு

ஷா ஆலாம், ஆகஸ்ட் -20, சிலாங்கூர், ஷா ஆலாமில் திருமணத்திற்கான பொருட்களை விற்கும் கடையில் ஆயுதமேந்திக் கொள்ளையிட்ட நால்வர் தேடப்படுகின்றனர்.

அச்சம்பவம் ஆகஸ்ட் 18-ம் தேதி நண்பகல் வாக்கில் நிகழ்ந்ததாக, ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் மொஹமட் இக்பால் இப்ராஹிம் (Mohd Iqbal Ibrahim) தெரிவித்தார்.

சம்பவத்தின் போது கடையில் 3 பணியாளர்களும், வாடிக்கையாளர்களான 4 பெண்களும் இருந்தனர்.

சந்தேக நபர்கள் ஹெல்மட் அணிந்து, வாயை துணியால் கட்டியிருந்ததோடு, அவர்களில் இருவர் பாராங் கத்தியையும், சாதாரண கத்தியையும் கையில் வைத்திருந்தனர்.

வெறும் ஏழே நிமிடங்களில் அவர்கள் கொள்ளையிட்டு தப்பினர்.

அதில் அக்கடைக்கு 1,000 ரிங்கிட் நட்டம் ஏற்பட்டது; பொருட்கள் வாங்க வந்த 3 பெண்களிடமிருந்த மொத்தம் 22,000 ரிங்கிட் மதிப்பிலான நகைகளும் கொள்ளையிடப்பட்டன.

அக்கொள்ளையை நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தால் போலீசை தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!