கோலாலம்பூர், ஆகஸ்ட்-16 – சிலாங்கூர், ஷா ஆலாமில் மோட்டார் சைக்கிளில் wheelie சாகசம் புரிந்த 2 பதின்ம வயது பையன்கள் ஒருவரோடு ஒருவர் மோதி உயிரிழந்தனர்.
சுங்கை பெலோங், அமான் புத்ரி, ஜாலான் எல்மினா பிஸ்னல் பார்க்கில் நேற்று முன்தினம் இரவு 11.20 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
கம்போங் குபு காஜாவைச் சேர்ந்த அவ்விருவரும் நண்பர்கள் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாக போலீஸ் கூறியது.
Wheelie சாகசத்தின் போது முதலில் எதிர் திசையில் மோதிக் கொண்ட மோட்டார் சைக்கிள்கள், கடைசியில் முகத்துக்கு முகம் நேராக மோதிக் கொண்டன.
அதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
சவப்பரிசோதனைக்காக, சடலங்கள் சுங்கை பூலோ மருத்துவனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சம்பவத்தின் போது இரு நண்பர்களுடன் வேறு யாராவது இருந்தார்களா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரிக்கிறது.