ஷா ஆலாம், நவம்பர்-23, சிலாங்கூர், ஷா ஆலாம், செக்ஷன் 16-ல் TNB கேபிள்களைத் திருட முயன்ற இரு ஆடவர்கள் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தனர்.
நேற்று நண்பகல் வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், முறையே 49, 31 வயதிலான இருவருக்கும் முகம், கை, கால்களில் தீப்புண் காயங்கள் ஏற்பட்டன.
உடனடியாக ஷா ஆலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரின் உடல்நிலை சீராக இருப்பதாக, மாவட்ட போலீஸ் கூறியது.
மின் துணை நிலையத்தில் இருவரும் அத்துமீறி கேபிள்களை வெட்டிய போது வெடிப்பு ஏற்பட்டு தீ பரவியது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதனால் அப்பகுதிக்கான மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டது.
கேபிள் பழுதுப்பார்ப்பு உள்ளிட்ட செலவுகளையும் சேர்த்து மொத்தம் 350,000 ரிங்கிட் இழப்பை அச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.