ஷா ஆலாம், செப்டம்பர்-26 – சிலாங்கூர், ஷா ஆலாம், Persiaran Sultan சாலையில் தேங்கியிருந்த நீரை தவிர்க்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் தடம்புரண்டதில் 48 வயது ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் நிகழ்ந்த சம்பவத்தின் போது, Honda ADV மோட்டார் சைக்கிளில் LKSA நெடுஞ்சாலையிலிருந்து ஷா ஆலாம் மாநகரை நோக்கி அவர் வந்துகொண்டிருந்தார்.
சம்பவ இடத்தை நெருங்கிய போது சாலையின் இடப்பக்கம் மழை நீர் தேங்கியிருந்ததால் அவர் அதனைத் தவிர்க்க முயன்றார்.
துரதிஷ்டவசமாக மோட்டார் சைக்கிள் தடம்புரண்டு சாலையில் விழுந்தவர், தலையில் படுகாயமேற்பட்டு அங்கேயே மரணமுற்றார்.