
கோலாலம்பூர், மார்ச் 23 – நாடாளுமன்ற விவாவதத்தின்போது TikTok செயலியின் மூலம் தமது நேரலை தற்காலிகமாக தடுக்கப்பட்டதாக Arau நாடாளுமன்ற உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டை நிருபிக்கும்படி தொடர்பு மற்றும் பல்லூடக துணையமைச்சர் Teo Nie Ching சவால் விடுத்தார்.
TikTok க்குடன் அமைச்சு பேச்சு நடத்தியபின் தமது நேரலை தடுக்கப்பட்டதாக Shahidan தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்பதோடு அதனை தடுக்க வேண்டிய அவசியம் அமைச்சுக்கு இல்லையென்றும் Teo Nie Ching விவரித்தார்.
அமைச்சுக்கும் Tiktok சமூக வலைத்தளத்திற்மிடையிலான ஒருங்கிணைப்பே இதற்கு காரணம் என Shahidan பொறுப்பற்றத்தனமாக கூறியுள்ளார். துணிச்சல் இருந்தால் இதனை நாடாளுமன்றத்திற்கு வெளியே தெரிவிக்கும்படி Shahidan-னுக்கு Teo Nie Ching அறைகூவல் விடுத்தார்.