Latestஇந்தியா

ஸ்கூட்டரின் எண் பட்டையினால் தர்மசங்கடத்திற்கு உள்ளாகிவரும் பெண்

புதுடில்லி, டிச 2 – வாகனங்களுக்கு சிறப்பு எண் பதிவுகளை பெறுவதற்கு பலர் அதிக பணத்தை செலவு செய்வார்கள். 001,007,1234 என்ற பதிவு எண்களை பெறுவதில் பலருக்கு அதிக ஆர்வம். புதுடில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்ட தனித்துவமான எண் பட்டையினால் பெரும் தர்மசங்கடத்திற்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளார். தினசரி மெட்ரோவில் பயணம் செய்து வந்த அந்த இளம் பெண் தமது தந்தை வாங்கி தந்த ஸ்கூட்டரினால் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அதில் உள்ள எண் பட்டையினால் தினந்தோறும் பலரது கேலிக்கும் கிண்டலுக்கும் அவர் உள்ளாகி வருகிறார். அந்த பெண் DL 3 SEX என்ற எண் பதிவை தனது ஸ்கூட்டருக்கு பெற்றுள்ளார். இந்திய மக்களைப் பொறுத்தவை SEX என்ற வார்த்தை எப்போதும் ஒருவித சந்தேக மனப்பான்மை அல்லது பிடிக்காத வார்த்தையாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக எப்போதும் கிண்டலுக்கு உள்ளாகி வருவதால் அப்பெண் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!