
சத்தீஸ்கர், டிச 29 – காதலை முறித்துக் கொள்ள எண்ணியதால், 20 வயது பெண்ணை, screwdriver – எனப்படும் திருப்பளியைக் கொண்டு , 51 முறை குத்தி கொடூரமாக கொலை செய்திருக்கிறான், இந்தியா சத்தீஸ்கரைச் சேர்ந்த ஆடவன் ஒருவன். சம்பவத்தின் போது அந்த பெண், வீட்டில் தனியாக இருந்ததாகவும், கதறல் சத்த கேட்காமல் இருக்க அப்பெண்ணின் வாயை அந்த ஆடவன் தலையணையைக் கொண்டு மூடியதாகவும், போலீசார் தெரிவித்தனர். அப்பெண்ணை ரத்த வெள்ளத்தில் அவரது சகோதரர் கண்டெடுத்ததாக அவர்கள் கூறினர்.
கையுடன் திருப்பளியையும் கொண்டு வந்திருந்ததால், திட்டமிட்டே அந்த பெண்ணை கொலை செய்தததாக நம்பப்படும் அந்த ஆடவன் தற்போது தலைமறைவாகியிருக்கிறான்.