கோலாலம்பூர், பிப் 11 – கோலாசிலாங்கூரில் NS Gadgets கடையில் வாடிக்கையாளர்கள்போல் பொருட்களை பார்த்த பின் இந்தியக் கும்பல் ஒன்று ஒலிப்பெருக்கியைக் களவாடிச் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட காணொளியை Chin Teddy எனும் ஒருவர் தனது முகநூல் கணக்கில் நேற்று பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அந்தத் திருட்டுச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒரு இந்தியப் பெண்ணும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டதாக TheReporter ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் போலீஸ் தரப்பில் வெளியிடப்படவில்லை.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்6 hours ago