
மெட்ரிட், செப் 11 – ஸ்பெய்னில் பார்சிலோனாவிற்கு அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நால்வரை ரயில் ஒன்று மோதியதைத் தொடர்ந்து அவர்கள் மாண்டனர். ரயில் தண்டவாளப் பகுதியை கடக்கக்கூடாது என்ற எச்சரிக்கையை மீறி இரவு மணி 8.22 அளவில் எழுவர் ரயில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதியது. சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மூவர் மாண்ட வேளையில் நான்கவாது நபர் மருத்துவமனையில் இறந்ததாக ஸ்பெய்ன் அவசர சேவைகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. காயத்திற்குள்ளான மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.