கோலாலம்பூர், செப்டம்பர் 30 – நாட்டின் தாய்க் கோவிலான கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், நாட்டின் புராதன சின்னமாக அங்கீகரிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டான் ஸ்ரீ. ஆர் நடராஜா தெரிவித்தார்.
கோலாலம்பூர் Jalan Tun H.S. Lee. யில் உள்ள 150 ஆண்டு கால வரலாற்றைக்கொண்ட ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் வளாகத்தை புராதன பகுதியாக 2005 ஆம் ஆண்டு தேசிய பாரம்பரிய சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அங்கீகார கடிதத்தை சுற்றலா, கலை, பண்பாட்டு அமைச்சின் தேசிய பாரம்பரிய இலாகாவின் பாரம்பரிய ஆணையம் வழங்கியிருப்பதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவரான டான் ஸ்ரீ ஆர். நடராஜா கூறியுள்ளார்.
வரலாற்று சிறப்பு வாய்ந்த மகா மாரியம்மன் ஆலயத்திற்கு கிடைத்த இந்த பெருமை இந்தியர்களுக்குக் கிடைத்த ஒரு மாபெரும் அங்கீகாரம் என்று அவர் குறிப்பிட்டார்.