ஹங்காங், பிப் 22 – ஹங்காங்கில் இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சிகளில் கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிரேசிலில் இறக்குமதி செய்யப்பட்ட மாட்டிறைச்சி மற்றும் போலாந்தில் இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இறைச்சியில் கோவிட் தொற்று கண்டறியப்பட்டதை ஹங்காங் அதிகாரிகள் உறுதிப்டுத்தியுள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிகள் இனி கடுமையாக பரிசோதிக்கப்படும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஹங்காங் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.