ஹங் காங் , பிப் 14 – ஓரிட பொருளாதார மையமான ஹங் காங் ஐந்தாம் கட்ட கோவிட் அலையின் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளது.
பிப்ரவரி தொடக்கத்தில், வெறும் 100 கோவிட் தொற்று சம்பவங்களே பதிவான வேளையில், மிக குறுகிய காலத்திலே அந்த எண்ணிக்கை 13 மடங்கு அதிகரித்து 1, 300 ஆக பதிவாகியிருப்பதாக, அந்நாட்டின் தலைவர் கேரி லாம் ( Carrie Lam ) தெரிவித்தார்.