ஹங்காங் பொது விருது பேட்மிண்டன் 25 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இந்தோனேசிய வீரர் வெற்றி

ஹங்காங், செப் 18 – ஹங்காங் பொது விருது பேட்மிண்டன் போட்டியில் 25 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இந்தோனேசியாவின் ஜொனதன் கிறிஸ்டி வெற்றி பெற்றார். அவர் ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் கடுமையான போராட்டத்தற்குப் பின் ஜப்பானின் கென்தா நிஷிமோடோவை 12 -21, 22 -20, 21-18 என்ற புள்கிக் கணக்கில் 90 நிமிட நேர போராட்டத்திற்குப் பின் வீழ்த்தினார். 1998 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற புடி சந்தோசோவுக்குப் பின் ஹங்காங் பொது விருது பேமிண்டன் போட்டியில் ஜொனதன் கிறிஸ்டி வெற்றி பெற்றுள்ளார்.
மகளிர் பிரிவின் ஒன்றையர் ஆட்டத்தில் ஜப்பானின் யமாகுச்சி 21 -18, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் ஜாங் யிமானை வீழ்த்தினார. அவர் இவ்வாண்டு அடைந்த ஐந்தாவது வெற்றி இதுவாகும்.
இதனிடையே மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தோனேசியாவின் அப்ரியாணி ரஹாயு – ஸிதி ரமாதந்தி ஜோடி 14-21, 24-22, 21-9 என்ற புள்ளிக் கணக்கில் மலேசியாவின் பெர்லி டான் – தினா முரளிதரன் ஜோடியைக் கடுமையான போராட்டத்திற்குப் பின் வீழ்த்தினர்.