Latestமலேசியா

ஹடி அவாங்கை அரசாங்க எம். பிக்கள் சாடினர்

கோலாலம்பூர், மார்ச் 7 – ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுவது எங்களின் உரிமை என பாஸ் கட்சியின் தலைவர் ஹடி அவாங் கூறியிருந்ததை அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாடினர்.

நாட்டின் மேம்பாட்டில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வ தரப்பாக இல்லையென்பதை பார்க்கும்போது கவலையாக இருப்பதாக பி.கே.ஆர் தொடர்பு இயக்குனரும் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான Lee Chean Chung தெரிவித்தார்.

இதனிடையே Hadi Awang கின் அறிக்கை பொறுப்பற்றதாக இருப்பதாக DAP உதவித் தலைவர் Nga Kor Ming தெரிவித்தார். ஒற்றுமை அரசாங்கம் தனது ஐந்து ஆண்டுகால தவணையை நிறைவு செய்ய வேண்டும் என்ற பேரரசரின் உத்தரவுக்கு எதிராக ஹடி அவாங்கின் அறிக்கை இருப்பதாக தெலுக் இந்தான் எம்.பிமான Nga Kor Ming நினைவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!