
பெட்டாலிங் ஜெயா, செப் 7 – பாஸ் கட்சித் தலைவர் ஹடி அவாங் மீதான விசாரணை முடிவடைந்து விட்ட நிலையில், அந்த விசாரணை அறிக்கை சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் இன்று காலை சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக போலீச் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேய்ன் தெரிவித்திருக்கிறார்.
சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திலிருந்து மேல் நடவடிக்கை உத்தரவுக்காக தாங்கள் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். மலேசியாவில் மன்னிப்பு வழங்கும் முறை இஸ்லாத்துக்கு எதிராக இருப்பதாக கடந்த ஆகஸ்ட் 26-ல் ஹடி கூறியிருந்ததாக தகவல் வெளியானது. பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு மட்டுமே மன்னிக்கும் அதிகாரம் உள்ளது தவிர அரச மன்னிப்பு வாரியத்துக்கு இல்லை என்றும் கூறியிருந்தாக போலிஸ் புகார் செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்த விசாரணை நடந்தது.
இதனிடையே, துன் மகாதீர் அரசியல் அமைப்புப் பற்றி அவதூராக பேசியது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையும் சட்டத்துறை அலுவலகத்திடம் இரு நாட்களுக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்டதாக ரசாருடின் தெரிவித்தார்.